சீனாவில் 1700-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு

 

சீனாவில் 1700-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு

சீனாவில் 1700-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெய்ஜிங்: சீனாவில் 1700-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில், உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ttn

இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்கும் மருத்துவர்களுக்கும், நர்ஸ்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதால் பெரும் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன.  இந்த நிலையில், சீனாவில் 1700-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் இதுவரை 6 சுகாதார பணியாளர்கள் இறந்துவிட்டதாக தேசிய சுகாதார ஆணையத்தின் துணை இயக்குநர் ஜெங் யிக்சின் தெரிவித்துள்ளார். சீனாவில் சுகாதார ஆணையம் மிகவும் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. மருத்துவ நிறுவனங்கள் உதவியுடன் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.