சீனாவில் வேட்டையாடும் கொரோனா வைரஸ் – ஆனால் சீன அதிபர் ரகசிய இடத்தில் உள்ளாரா?

 

சீனாவில் வேட்டையாடும் கொரோனா வைரஸ் – ஆனால் சீன அதிபர் ரகசிய இடத்தில் உள்ளாரா?

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் நிலையில் சீன அதிபரை காணவில்லை என மூத்த அரசியல் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் நிலையில் சீன அதிபரை காணவில்லை என மூத்த அரசியல் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 97 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சீன மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

ttn

இவ்வாறு ஒட்டுமொத்த சீன நாடே கொரோனா வைரஸ் பாதிப்பால் அவதி அடைந்து வரும் நிலையில், அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கை காணவில்லை என்றும் அவர் எங்கே போய் விட்டார் என்றும் மூத்த அரசியல் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த 2020-ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது  அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டு பொதுமக்களிடையே உரையாற்றினார். அதன் பிறகு அவரை வெளியில் பார்க்க முடிவதில்லை என்று கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் அவர் ரகசிய இடத்தில் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.