சீனாவில் ரிலீசாகும் சூப்பர் ஸ்டாரின் ‘2.0’

 

சீனாவில் ரிலீசாகும் சூப்பர் ஸ்டாரின் ‘2.0’

இந்தியாவில் இமாலய வசூல் வேட்டையாடி வரும் சூப்பர் ஸ்டாரின் ‘2.0’ திரைப்படம் சீனாவில் பிரம்மாண்டமாக ரிலீசாகவுள்ளது.

சென்னை: இந்தியாவில் இமாலய வசூல் வேட்டையாடி வரும் சூப்பர் ஸ்டாரின் ‘2.0’ திரைப்படம் சீனாவில் பிரம்மாண்டமாக ரிலீசாகவுள்ளது.

லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் மாஸாக வெளியானது. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலுடன் ரோபோட்டிக்ஸை இணைத்து சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக வெளியாக ’2.0’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்தியாவில் அதிக பொருட் செலவில் அதிநவீன 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தில், ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் ரூ.450 கோடி வசூலித்து மெகா பிளாக் பஸ்டர் படமாக அறிவிக்கப்பட்ட ‘2.0’, தற்போது சீனாவில் பிரம்மாண்டமாக ரிலீசாகவுள்ளது.

சோனி, 20 சென்சுரி ஃபாக்ஸ், டிஸ்னி, வார்னர் ப்ரோஸ், யுனிவர்சல் போன்ற மிகப்பெரிய ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் எச்.ஒய் மீடியா நிறுவனம் சீனாவில் ‘2.0’ திரைப்படத்தை ரிலீஸ் செய்கிறது. சீனாவில் சுமார் 10,000 திரையரங்குகளில் 56,000 திரைகளில் ‘2.0’ ரிலீசாகவுள்ளதாகவும், அதில் 47,000 திரைகள் 3டி தொழில்நுட்பத்திலானது என்றும் கூறப்பட்டுள்ளது. உலக சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய 3டி ரிலீஸ் ‘2.0’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பாக்ஸ் ஆபீஸில் வசூலை வாரிக் குவித்து வரும் ‘2.0’ சீனாவிலும் நல்ல வசூலை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் பாதியில் சுமார் 5 திரைப்படங்கள் சீனாவில் ரிலீசாகவுள்ளன. அமீர்கான் நடித்த ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’, ஷாருக்கானின் ‘ஜீரோ’, தளபதி விஜய்யின் ‘மெர்சல்’, சூப்பர் ஸ்டார்-அக்ஷய்குமாரின் ‘2.0’ ஆகிய படங்கள் சீனாவில் ரிலீசாகின்றன.