சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை 636 ஆக அதிகரிப்பு

 

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை 636 ஆக அதிகரிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது.

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவியது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் இந்த வைரஸ் பரவியதாக முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்தது. அந்தக் கட்டுவிரியன் பாம்புகளை சூப் வைத்தும், உணவாகவும் சீன மக்கள் சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவியது. சீனா மட்டுமின்றி அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகாட்ட தொடங்கியுள்ளது.

ttn

சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 636 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 69 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சீன மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.