சீனாவில் கொரோனா வைரஸால் 17 பேர் பலி; 540 பேருக்கு பாதிப்பு – வுகான் நகரில் அனைத்து போக்குவரத்தும் ரத்து

 

சீனாவில் கொரோனா வைரஸால் 17 பேர் பலி; 540 பேருக்கு பாதிப்பு – வுகான் நகரில் அனைத்து   போக்குவரத்தும் ரத்து

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 540 பேர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வுகான்: சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 540 பேர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2020-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே கொரோனா வைரஸ்’ என்றழைக்கப்படும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் சீனாவில் பரவி வருகிறது. இதுவரை இந்த காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 540 பேர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். நிலைமை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே போவதால் வுகான் நகரின் அனைத்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் போக்குவரத்து மற்றும் வெளியூருக்கு செல்லும் விமான சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ttn

இந்நிலையில் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. புதிய நோயாக உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தங்கள் நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகின்றன. இந்த வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக சீனாவில் மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் முகமூடி அணிந்தே வெளியில் சென்று வருகிறார்கள். தற்போதைய புதிய செய்தியாக அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவத் தொடங்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.