சீனாவில் ஒரே நாளில் 38 ஆயிரம் பன்றிகள் கொன்று புதைப்பு – பின்னணி விவரம்

 

சீனாவில் ஒரே நாளில் 38 ஆயிரம் பன்றிகள் கொன்று புதைப்பு – பின்னணி விவரம்

பெய்ஜிங்: சீனாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பன்றிகள் கொன்று புதைக்கப்பட்டன.

சீனாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என்னும் கொடிய வகை தொற்று நோய் சமீபத்தில் வேகமாக பரவியது. இதனால் கடந்த மாதத்தில் மட்டும் அங்குள்ள 5மாகாணங்களில் 5 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து நோய் பாதித்துள்ள மாகாணங்களில் இருந்து இறைச்சிக்காக பன்றிகளை பிறபகுதிகளுக்கு கொண்டு செல்ல சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக பன்றி இறைச்சி விற்பனை செய்யும் கடைகளும் அங்கு மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பன்றிகள் மூலமாக வேகமாக பரவும் இந்த நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் அங்குள்ள லியாவ்னிங், ஹேனான், ஜியான்சு, ழேஜியாங் மற்றும் அன்ஹுய் மாகாணங்களில் சுமார் 38 ஆயிரம் பன்றிகள் நேற்று ஒரே நாளில் கொன்று புதைக்கப்பட்டன.