சீனாவில் உருவானது புதிய வைரஸ்! 32 பேர் பாதிப்பு… ஒருவர் உயிரிழப்பு!!

 

சீனாவில் உருவானது புதிய வைரஸ்! 32 பேர் பாதிப்பு… ஒருவர் உயிரிழப்பு!!

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

எலி

இந்த நிலையில் சீனாவின் யன்னாவ் மாகாணத்தில் புதிய வைரஸ் தாக்கி ஒருவர் உயிரிழந்திருப்பது தெரியவந்திருக்கிறது. சீனாவின் குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் வைரஸ் தாக்குதலுக்கு ஒருவர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 32 பேர் இந்த ஹன்டா வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த வைரஸ் எலிகள் மூலம் மக்களுக்கு மற்றும் பிற விலங்குகளுக்கு பரவக்கூடியது என சீனாவின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது இந்த நோய் மனிதரின் சிறுநீரகத்தை பாதிப்பதுடன் காய்ச்சல் ஏற்படுத்தி உயிரை பறிக்கக்கூடும் என தெரியவந்துள்ளது. எனினும் இந்த வைரஸ் காற்றில் பரவாது என்றும் மனிதருக்கு மனிதர் சிறுநீர் சளி எச்சில் ஆகியவற்றின் மூலம் பரவ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் அறிகுறிகளாக சோர்வு, காய்ச்சல், தசை வலி, தலைவலி, மயக்கம் மற்றும் அடி வயிற்று கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த நேரத்தில் சிகிச்சை பெறத் தவறினால் சளி இருமல் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்பட்டு உயிரே போகக்கூடிய சூழல் ஏற்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.