சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த 3 லட்சம் ரேபிட் கிட் கருவிகள்

 

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த 3 லட்சம் ரேபிட் கிட் கருவிகள்

கொரோனா சோதனைக்காக சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்க இந்தியா முடிவு செய்து இருந்தது. இதன் மூலம் துரிதமாக கொரோனா சோதனைகளை செய்ய முடியும். 4 லட்சம் கிட் ஆர்டர் செய்யப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 50 ஆயிரம் ரேபிட் கிட் கடந்த 9 ஆம் தேதி தமிழகத்திற்குவரும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

கொரோனா சோதனைக்காக சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்க இந்தியா முடிவு செய்து இருந்தது. இதன் மூலம் துரிதமாக கொரோனா சோதனைகளை செய்ய முடியும். 4 லட்சம் கிட் ஆர்டர் செய்யப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 50 ஆயிரம் ரேபிட் கிட் கடந்த 9 ஆம் தேதி தமிழகத்திற்குவரும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். ஆனால் 11 தேதியாகவும் இன்னும் வரவில்லை. சீனாவிலிருந்து கப்பலில் கிளம்பிய ரேபிட் கிட்டை அமெரிக்கா பாதி வழியிலேயே மூன்று மடங்கு தொகைக்கு வாங்கியதாக தகவல்கள் வெளியானது. மேலும் சீனாவிலிருந்து ஜெர்மனிக்கு செல்லவிருந்த மருத்துவ உபகரணங்களையும், பிரான்ஸிருக்கு செல்ல வேண்டிய மருத்துகளையும் அமெரிக்கா அபகரித்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

coronavirus

கொரோனா பாதிப்பு உள்ளதா இல்லையா என்பதை அரை மணி நேரத்தில் கண்டுபிடிப்பதற்கான ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா சோதனைகளை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் சீனாவில் இருந்து 3 லட்சம் ரேபிட் கிட் விரைவுப் பரிசோதனை உபகரணங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன