சீனாவில் ஆப்பிள் ஸ்டோர்கள் சில மீண்டும் திறப்பு – பணிநேரம் குறைப்பு

 

சீனாவில் ஆப்பிள் ஸ்டோர்கள் சில மீண்டும் திறப்பு – பணிநேரம் குறைப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் தற்காலிகமாக மூடப்பட்ட ஆப்பிள் ஸ்டோர்களில் சிலவற்றை அந்நிறுவனம் மீண்டும் திறந்துள்ளது.

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் தற்காலிகமாக மூடப்பட்ட ஆப்பிள் ஸ்டோர்களில் சிலவற்றை அந்நிறுவனம் மீண்டும் திறந்துள்ளது.

சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில், உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 1483 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 116 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ttn

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதை தொடர்ந்து சீனாவில் இருந்த தனது ஆப்பிள் ஸ்டோர்களை அந்நிறுவனம் தற்காலிகமாக மூடியது. இந்த நிலையில், சீன தலைநகர் பெய்ஜிங்கில் 5 ஸ்டோர்களை ஆப்பிள் நிறுவனம் மீண்டும் திறந்துள்ளது. அங்கு காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த கடைகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை அந்தக் கடைகள் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பணிநேரம் குறைக்கப்பட்டு உள்ளது.