சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்… அதிர்ந்துபோன மக்கள்… 12 பேர் உயிரிழப்பு!

சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்… அதிர்ந்துபோன மக்கள்… 12 பேர் உயிரிழப்பு!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள இபின் நகரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 122 பேர் படுகாயமடைந்தனர்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள இபின் நகரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 122 பேர் படுகாயமடைந்தனர்.

.சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்றிரவு 10.55 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. பூமிக்கடியில் சுமார் 16 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் இந்த நிலநடுக்கங்களால் கட்டடங்கள் இடிந்து விழுந்தது. இதில் இக்கி பலர் உயிரிழந்தனர். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த நிலடுக்கத்தால் பலர் உயரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இன்று அதிகாலை 5 மணியளவில், அதேபகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.3 ரிக்டர் அளவில் பதிவானது.  மொத்தமாக நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உள்ளது.