சீனாவிலிருந்து மாஸ்க், வென்டிலேட்டர்! – மத்திய அரசு முடிவு

 

சீனாவிலிருந்து மாஸ்க், வென்டிலேட்டர்! – மத்திய அரசு முடிவு

னாவின் வுகான் நகரில் கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது உலகம் முழுவதும் பரவிவிட்டது. ஆனால், சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவியபோது இந்தியாவிலிருந்து அதிக அளவில் மாஸ்க் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டன.

சீனாவிலிருந்து அதிக அளவில் மாஸ்க் மற்றும் வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

corona-patients-7

சீனாவின் வுகான் நகரில் கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது உலகம் முழுவதும் பரவிவிட்டது. ஆனால், சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவியபோது இந்தியாவிலிருந்து அதிக அளவில் மாஸ்க் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தியாவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடைசி நிமிடத்தில் மாஸ்க் உள்ளிட்டவை ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டது. 

corona-mask-78

தற்போது இந்தியாவில் மாஸ்க், சானிடைசர்கள், வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. தற்போதைய சூழலில் மேற்கத்திய நாடுகள், அமெரிக்கா என எல்லா இடங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் வேறு வழியின்றி சீனா, தென் கொரியாவிடமிருந்து மாஸ்க், மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ய இந்திய முடிவு செய்துள்ளது. விரைவில் நான்கு கோடி அளவுக்கு மாஸ்க் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.