சீனமயமாகும் இலங்கை… தொடரும் அடாவடி! இந்தியாவுக்கு தலைவலி

 

சீனமயமாகும் இலங்கை… தொடரும் அடாவடி! இந்தியாவுக்கு தலைவலி

இலங்கையில் சீனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விரைவில் நாடே சீனாவுக்கு கீழ் செல்லும் நிலை கூட வரலாம் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

buddha

பௌத்தர்களின் பூமி என்று கூறிக்கொண்டு இலங்கையும் சீனாவும் நட்பு பாராட்டி வருகின்றன. சீனா பல ஆயிரம் கோடிகளைக் கடனாகக் கொட்டுவதும், அதற்கு பிரதிபலனாக இலங்கையில் சீனர்களின் ஆதிகத்தை இலங்கை அரசு அனுமதிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. 2002ம் ஆண்டு இலங்கையின் தென்கோடியான ஹம்பன்தோட்டாவில் ஒரு சிறிய துறைமுகத்தைக் கட்ட இலங்கை திட்டமிட்டது. நாங்கள் உதவி செய்கிறோம் என்று சீனா உள்ளே வந்தது. நிதி உதவி செய்ததுடன், கட்டுமானத்துக்கு ஆட்களை அனுப்பி அந்த பணத்தை அப்படியே சீனாவுக்குக் கொண்டு சென்றது சீன அரசு.

port

கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பிறகுதான் இலங்கை அரசுக்கு விழிபிதுங்க ஆரம்பித்தது. வாங்கிய கடனுக்கான வட்டியை கட்டும் அளவுக்குக் கூட அதில் வருமானம் இல்லை. கடன் சுமை நெருக்க சீனாவே ஒரு தீர்வையும் தந்தது. மொத்த கடனையும் அடைத்துவிட வேண்டும் அல்லது 99 ஆண்டு குத்தகைக்கு அந்த துறைமுகத்தை சீனாவிடம் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் அந்த தீர்வு.

china

இப்படி இலங்கையின் தென் எல்லையில் துறைமுகம் தொடங்கி, வடக்கில் மின்நிலையம் வரை சீனாவின் ஆதிக்கத்தில் பல நிறுவனங்கள் உள்ளன. சீனர்கள் தங்குதடையின்றி இலங்கையில் வந்து வேலை செய்து வருகின்றனர். தாங்கள்தான் இலங்கையின் உயர்தர குடிமக்கள் என்று கருதும் அளவுக்கு சீனர்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தங்களுக்கு என்று தனி ரயிலை இயக்க வேண்டும் என்று கூட அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளார்களாம்.

china

விரைவில் நிரந்தர குடியுரிமை கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை… அவர்கள் கேட்டதை எல்லாம் செய்து தர கோத்தபய, மஹிந்தா ராஜபக்சே சகோதரர்கள் தயாராக இருக்கும்போது எல்லாமே சாத்தியமாகும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறும் என்றும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.