சீதையின் அசோகா மலர் முதல் இட்லி பூ வரை… தொடரும் ராமதாசின் பூக்கள் ட்வீட்

சீதையின் அசோகா மலர் முதல் இட்லி பூ வரை… தொடரும் ராமதாசின் பூக்கள் ட்வீட்

சீதை சிறை வைக்கப்பட்ட அசோக வனத்திலிருந்த மலர் என்று சில தினங்களுக்கு முன்பு டாக்டர் ராமதாஸ் ட்வீட் செய்தார். தொடர்ந்து தன்னுடைய தோட்டத்தில் மலர்ந்துள்ள மலர்களை ராமதாஸ் வெளியிட்டு வருகிறார். இன்று அந்த வரிசையில் நான்காவது பூ என்று இட்லி பூவைப் பற்றி வெளியிட்டுள்ளார்.

டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள மலர்கள் பற்றிய ட்வீட்டில், “தைலாபுரம் தோட்டத்து மலர்கள்: 4. வெட்சிப்பூ. இதை இட்லிப்பூ என்றும் அழைப்பார்கள். ஆங்கிலத்தில் இதற்கு West Indian Jasmine என்று பெயர். இதன் அறிவியல் பெயர்  Ixora ஆகும்.” என்று குறிப்பிட்டுள்ளார். இதையும் அருமை என்று அவரது தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு தைலாபுரம் தோட்டத்தில் மலர்ந்துள்ள, சீதை சிறை வைக்கப்பட்ட அசோக வனத்திலிருந்த அசோகா மலர் என்று முதன் முதலில் ஒரு மலர் படத்தை வெளியிட்டார். ராமதாஸ் என்ன சொல்ல வருகிறார், தைலாபுரம் தோட்டம் என்ற சீதை சிறைவைக்கப்பட்ட அசோகவனம் என்று ராமதாஸ் கூறுகிறாரா என்று எல்லாம் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். எதற்கும் பதில் அளிக்காமல், தன்னுடைய தோட்டத்தில் மலரும் மலர்கள் என்று ராமதாஸ் பதிவிட்டு வருகிறார்.