சீதக்காதி ரீலிஸில் சிக்கலா: விஜய் சேதுபதியிடம் மல்லுக்கு நின்ற செய்தியாளர்!

 

சீதக்காதி ரீலிஸில் சிக்கலா: விஜய் சேதுபதியிடம் மல்லுக்கு நின்ற செய்தியாளர்!

‘சீதக்காதி’ திரைப்படம் ரிலீசாவதில் சிக்கல் உள்ளதா என கேட்டு சர்ச்சை பதிலை எதிர்ப்பார்த்த செய்தியாளரிடம் விஜய் சேதுபதி காட்டமாக பேசிய பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை: ‘சீதக்காதி’ திரைப்படம் ரிலீசாவதில் சிக்கல் உள்ளதா என கேட்டு சர்ச்சை பதிலை எதிர்ப்பார்த்த செய்தியாளரிடம் விஜய் சேதுபதி காட்டமாக பேசிய பரபரப்பை ஏற்படுத்தியது.

நீண்ட இடைவெளிக்குப் பின் திரைப்படம் இயக்கவுள்ள சேரனின் புதுப்பட தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி அறிவித்தார். இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதி, செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, ‘96’ திரைப்படத்தின் ரிலீசில் இருந்தது போல் ‘சீதக்காதி’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் இருப்பதாகவும், தொடர்ந்து தங்களது திரைப்படத்திற்கு இது போன்று பண பிர்சனைகள் வருவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சேது, பிரச்னைகள் இருப்பது உண்மை தான், ஆனால் அதை தனி மனிதரால் தீர்க்க முடியாது. ‘96’ பட தயாரிப்பாளருக்கு கடன் பாக்கி இருந்ததால் அந்த பணத்தை செட்டில் செய்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்தோம். என்னிடம் பணம் இருந்ததால் கொடுத்துவிட்டேன். ஆனால், இந்த பிரச்னை பலருக்கும் உள்ளது, பலரும் தன்னை போல் பணம் செலுத்தியிருக்கிறார்கள் என்றார்.

vijaysethupathi

இதனிடையே குறுக்கிட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த பிரச்னைகளை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்ற செய்தியாளரிடம், சர்ச்சை கிளப்பும் நோக்கத்தோடு கேள்வி கேட்டால் என்னிடம் பதில்லை. உங்களது கேள்விக்கு ஏற்கனவே பதில் கூறிவிட்டேன். எனது பதிலை ஏற்க மறுக்கிறீர்கள். படங்கள் ரிலீசாவதில் இருக்கும் பிரச்னைகள் குறித்து விவரமாக பேசுவோம், என் அலுவலக்த்திற்கு வாருங்கள் என கோபமாக கூறிவிட்டு பேச்சை மாற்றிவிட்டார்.

மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 5 படங்கள் ரிலீசாவதால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பது பற்றிய கேள்விக்கு, அது பற்றி தனக்கு தெரியாது சில சமயங்களில் இதுபோன்று நடந்துவிடும் என்றார். இதைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் குறித்த கேள்விக்கு அரசியல் பற்றி தனக்கு தெரியாது என்றும், சம்மந்தம் இல்லாத விஷயம் குறித்து தான் ஏன் கருத்துக் கூற வேண்டும் என்றும் கூறிவிட்டு சென்றார்.