சீதக்காதியை தொடர்ந்து சூப்பர் டீலக்ஸிலும் கெஸ்ட் ரோல்: அதிருப்தியில் ரசிகர்கள்!?

 

சீதக்காதியை தொடர்ந்து சூப்பர் டீலக்ஸிலும் கெஸ்ட் ரோல்: அதிருப்தியில் ரசிகர்கள்!?

நடிகர் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

சூப்பர் டீலக்ஸ்

super deluxe

ஆரண்ய காண்டம் படத்தினை தொடர்ந்து இயக்குநர்  தியாகராஜா குமாரராஜாவின் இரண்டாவது திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில், மிஷ்கின், காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்திலும் கெஸ்ட் ரோலா?

super deluxe

இப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய்சேதுபதி இதில் திருநங்கையாக நடித்துள்ளார். அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால்  சூப்பர் டீலக்ஸ் குறித்து இப்போது வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம், இந்த படத்தில் விஜய் சேதுபதி 30 நிமிடங்கள் மட்டுமே வருகிறாராம். சுமார் 2 மணி நேரம் 56 நிமிடம் ஓட கூடிய இப்படத்தில் விஜய் சேதுபதி குறைந்த நேரத்தில் வந்தாலும், படத்தின் புரமோஷனுக்காக அவர் முழு படத்திலும்  வருவது போல விளம்பரப்படுத்தி வருகின்றனர். 

 ஏமாற்றம் அளித்த சீதக்காதி

seethakathi

முன்னதாக விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான சீதக்காதி படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் சேதுபதியின் போர்ஷன் 25 நிமிடங்களே இருந்தது. இதனால்  ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததுடன், அது படத்தின் வியாபாரத்தையே பெருமளவு பாதித்தது. அதே பாணியை  தான் இந்த முறையும் சூப்பர் டீலக்ஸ் படக்குழுவினர் ஃபாலோ பண்ணியுள்ளனர். 

புலம்பும் ரசிகர்கள் 

vijaysethupathi

விஜய் சேதுபதி என்ற ஒன்றை மனிதனுக்காகத் திரையரங்கில் கூட்டம் வழியும் என்பதை தெரிந்து கொண்ட சிலர், அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர் என்று ரசிகர்கள் பலர் சமூகவலைதளங்களில் புலம்பி வருகின்றனர். 

வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க:  ‘அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடாதீங்க’ : ராமதாஸின் உச்சகட்ட காமெடி; பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆகிட்டாரு போல…?!