சீதக்காதியில் ரிப்பீட் காட்சிகள் நீக்கம்!

 

சீதக்காதியில் ரிப்பீட் காட்சிகள் நீக்கம்!

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’ திரைப்படத்தில் ஒரே காட்சிகள் பலமுறை வருவதால் சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.

சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’ திரைப்படத்தில் ஒரே காட்சிகள் பலமுறை வருவதால் சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வரும் ‘சீதக்காதி’ படத்தில் சில காட்சிகள் நீளமாகவும், சில காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது குறையாக சொல்லப்பட்டது.

seethakathi

இதைத் தொடர்ந்து, ஒரே மாதிரியாக இருக்கும் காட்சிகள் நீக்கப்பட்டு, படத்தின் ரன்னிங் டைம் ட்ரிம் செய்யப்பட்டுள்ளது. ஒரிஜினல் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 53 நிமிடங்களில் இருந்து 2 மணிநேரம் 30 நிமிடங்களுக்கு ட்ரிம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டாலும், மேஜிக்கலான காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்றும், டிரம் செய்யப்பட்டதற்கான அடையாளமே தெரியாது என்றும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.