சீட் பெல்ட் அணியாததால் ஓட்டுநர் உரிமம் ரத்து! இறந்த பின் வீடு தேடி வந்த ரசீது… புதிய வாகன சட்டமாம்!

சீட் பெல்ட் அணியாததால் ஓட்டுநர் உரிமம் ரத்து! இறந்த பின் வீடு தேடி வந்த ரசீது… புதிய வாகன சட்டமாம்!

சீட் பெல்ட் அணியாததால் உங்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்கிறோம் என ராஜஸ்தான் காவல்துறையினர் அந்த ஓட்டுநருக்கு ரசீது அனுப்பியுள்ளனர். இதில் என்ன ஒரு கொடுமை என்றால் ரசீது அனுப்பப்பட்டவர் இன்று உயிருடனே இல்லை….

போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு ஏற்கனவே இருந்த அபராதம், மற்றும் தண்டனையை விட பல மடங்கு அதிகமாக, அபராதம் மற்றும் தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளதே இந்த புதிய வாகன சட்டத்திருத்தம். மத்திய அரசு அறிமுகப்படுத்திய இத்திட்டம் செப் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. கேரளா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்கள் அபராத தொகை அதிகமாக இருப்பதால் இச்சட்டத்தை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டன. உத்திர பிரதேசம், உத்தர காண்ட், குஜராத் போன்ற மாநிலங்கள் அபராத தொகையை குறைத்து அமல்படுத்தியுள்ளன.

license

அதன்படி எப்பயோ செய்த தவறுக்கெல்லாம் இப்போது கடிதமும், அபராத ரசீதும் வந்துகொண்டிருக்கிறது. அப்படி ஒரு சம்பவம்தான் ராஜஸ்தானிலும் நடந்துள்ளது. ஜாலாவார் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திர கேசரா என்பவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தில் சென்றுள்ளார். அதற்காக இன்று அவருக்கு அபராத ரசீதும், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதாகவும் நோட்டீஸ் வந்துள்ளது. இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனியில் ராஜேந்திர கேசரா தற்போது உயிருடன் இல்லை. கடந்த 2011 ஆம் ஆண்டே அவர் இறந்துவிட்டார்