சீட் கொடுப்பதை பீகாரி முடிவு செய்வதா..? திமுகவுக்குள் சலசலப்பு..!

 

சீட் கொடுப்பதை பீகாரி முடிவு செய்வதா..? திமுகவுக்குள் சலசலப்பு..!

தேர்தலில் போட்டியிட ஆர்வமுடன் இருக்கும் திமுகவினர் பல வருடமாக உழைத்து வரும் நமக்கு சீட்டு கொடுப்பதை ஒரு பீகாரி முடிவு செய்வதா? அப்படி என்றால் நமது கட்சிக்கு தலைவர் எதற்கு என குழம்பிப்போய் உள்ளார்கள்.

அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இந்தியா முழுவதும் நடந்த தேர்தலில் வெற்றி பெறும் வகையில் பயணம் செய்து அந்த வெற்றியை தன்னுடைய பெயரை முன் நிறுத்துவதில் வல்லவர். 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஊழல் அலையால்  2014 கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்காது என்று காங்கிரஸ் நிர்வாகிகளே உணர்ந்தனர்.

இந்தியா முழுவதும் மோடி அலை வீசிக் கொண்டிருக்கையில் எப்படியும் பாஜக அடுத்து ஆட்சி அமைப்பது உறுதி என்பதை அறிந்த பிரசாந்த் கிஷோர் ஓடிக்கொண்டிருந்த பாஜக குதிரையின் மீது ஏறி அமர்ந்து கொண்டார். அதன் பின் பல மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய ஏற்கனவே வெற்றி பெற்ற அவர்கள் மீது சவாரி செய்தார் பிரசாந்த் கிஷோர்.

stalin

 மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் வெற்றிக்கு வேலை செய்து பிரசாந்த் கிஷோர் மம்தாவின் ஆலோசனைப்படி மம்தாவை பிரதமராக்க முன்னிறுத்தி மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் மறைமுகமாக ஈடுபட்டு தோல்வியை தழுவினார். மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பிரசாந்த் கிஷோரிடம் இந்த சட்டமன்ற தேர்தலில் தனக்கு பணியாற்ற அழைப்பு விடுத்தார். ஆனால் இதுகுறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவோம் என தெரிவித்த பிரசாரத்துக்கு ஆந்திராவின் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இருந்து அழைப்பு வர தனது குழுவினரிடம் அரசியலைப் பற்றி நன்கு தெரிந்து கொண்ட பிரசாந்த் கிஷோர் சந்திரபாபு நாயுடுவை கழட்டிவிட்டு ஜெகன்மோகன் ரெட்டி மீது சவாரி செய்து கொண்டார்.

stalin

 இப்படி தொடர்ந்து பந்தயக் குதிரையின் மீது ஏறி சவாரி செய்து வந்த பிரசாந்த் கிஷோர் இடைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த திமுக எனும் நொண்டிக் குதிரை மீது முதன்முதலாக சவாரி செய்ய காரணம் இதுவரை யாரும் கொடுக்காத பணத்தை, பிரசாந்த் கிஷோரே எதிர்பார்க்காத பணத்தை திமுக வாரிக் கொடுக்க உடனேயே பிரசாந்த் கிஷோர் சம்மதம் தெரிவித்து விட்டதாக தெரிகிறது. 2021 சட்டமன்ற தேர்தலின்போது பிரசாந்த் கிஷோர் அறிவிக்கும் நபருக்கு தான் சீட்டு என திமுக தலைமை முடிவு செய்திருப்பதை அறிந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட ஆர்வமுடன் இருக்கும் திமுகவினர் பல வருடமாக உழைத்து வரும் நமக்கு சீட்டு கொடுப்பதை ஒரு பீகாரி முடிவு செய்வதா? அப்படி என்றால் நமது கட்சிக்கு  தலைவர் எதற்கு என குழம்பிப்போய் உள்ளார்கள்.