சீசனே முடிய போது, நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு இன்னும் கூட தெரியல: கடுப்பான கமல் ஹாசன்

 

சீசனே முடிய போது, நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு இன்னும் கூட தெரியல: கடுப்பான கமல் ஹாசன்

 ​​​​​​​சீசனே முடிய போது, நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு இன்னும் கூட தெரியல என்று கமல் ஹாசன் கூறுவது போல புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

சென்னை: சீசனே முடிய போது, நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு இன்னும் கூட தெரியல என்று கமல் ஹாசன் கூறுவது போல புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 100 நாட்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களாக பங்கு பெற்றனர். இதில் வாரம் ஒருவர் என்ற முறையில் இதுவரை 11 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடைசியாக கடந்த வாரத்தில் நடிகை மும்தாஜ் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சியில், ‘ சீசனே முடிய போது, நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு இன்னும் கூட தெரியல இந்த வாரமாவது தெரியுதான்னு பார்ப்போம் என்று கமல் கூறுகிறார். மீதமிருக்கும் 6 பேரில் இந்த வாரம் 2 பேர் வெளியேற உள்ளதாக ஏற்கனவே கமல் ஹாசன் அறிவித்தார். வீட்டிலிருக்கும் 6 பேரில் ஜனனி ஃபைனலுக்கு செல்வதற்கான டிக்கெட்டை பெற்று இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளார். ஜனனி தவிர, மீதமிருக்கும் யாஷிகா ஆனந்த், பாலாஜி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகா ஆகிய 5 பேர் இந்தவார எவிக்‌ஷன் பட்டியலில் இருந்தனர். இவர்கள் வாங்கிய வாக்குகளின் அடிப்படையில் இந்த வார எவிக்‌ஷன் புராசஸ் இருக்கும். அதன்படி இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட இரண்டு பேரில் நடிகர் பாலாஜி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.