சீக்கிரமே லைவ் சேட் பண்ணலாம்; ஆர்மிகளுக்கு நன்றி தெரிவித்த ரித்விகா- வீடியோ

 

சீக்கிரமே லைவ் சேட் பண்ணலாம்; ஆர்மிகளுக்கு நன்றி தெரிவித்த ரித்விகா- வீடியோ

பிக் பாஸ் 2 டைட்டில் வென்ற நடிகை ரித்விகா தனது ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னை: பிக் பாஸ் 2 டைட்டில் வென்ற நடிகை ரித்விகா தனது ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் 106 நாட்கள் நடைபெற்று கடந்த செப்.30ம் தேதி நிறைவடைந்தது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று பிக் பாஸ் டைட்டிலை நடிகை ரித்விகா வென்றார்.

rithvika

பிக் பாஸ் வீட்டில் நடந்த சில தவறுகளை தட்டிக் கேட்டும், மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதத்தில் தனது கருத்துக்களை நேரடியாக பேசியும் மக்களை கவர்ந்தார். பிக் பாஸ் போட்டியில் ஒருவரை பற்றி புறம்பேசாத போட்டியாளராக கடைசி வரை தொடர்ந்த ரித்து, நேர்மையான போட்டியாளராகவும் பார்க்கப்பாட்டார்.

இந்நிலையில், பிக் பாஸ் போட்டி முடிந்து வெளியே வந்த ரித்விகா, சமூக வலைத்தளங்களில் தனக்கு ஆர்மி கிரியேட் செய்து ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் ஒரு இடைவெளி தேவைப்பட்டதாக கூறிய ரித்விகா, பிக் பாஸ் 2 சீசன் முடிந்து ஒரு வாரம் கழித்து தனது ரசிகர்களுக்கு வீடியோவில் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், விரைவில் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் லைவ் சேட் பண்ணலாம் என ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.