சி.பி.எஸ்.இ., 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; தேர்வு அட்டவணை முழு விவரம்

 

சி.பி.எஸ்.இ., 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; தேர்வு அட்டவணை முழு விவரம்

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

சென்னை: சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 2019-ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது.

12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது.

சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை விவரம்:

http://cbse.nic.in/newsite/circulars/2018/Class-X_datesheet.pdf

சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை விவரம்:

http://cbse.nic.in/newsite/circulars/2018/Class-XII_dt_sheet.pdf

 

சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுகள் தொடர்பான விதிகள் உள்ளிட்ட விவரங்களை www.cbse.nic.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.