சி.பி.எம். என்றாலே 9 தான்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஹெச்.ராஜா

 

சி.பி.எம். என்றாலே 9 தான்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஹெச்.ராஜா

ஈ.வெ.ரா, மணியம்மை பற்றிப் பாடத்திட்டத்தை பற்றிப் படித்த குழந்தைகள் ஒழுக்கமாக இருக்குமா? என்று  ஹெச்.ராஜா மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

அரியலூர்: ஈ.வெ.ரா, மணியம்மை பற்றிப் பாடத்திட்டத்தை பற்றிப் படித்த குழந்தைகள் ஒழுக்கமாக இருக்குமா? என்று  ஹெச்.ராஜா மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வர் ஆலயத்திற்கு வந்த பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சாமி தரிசனம் செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலம், 22 ஆயிரத்து 600 வணிக வளாகம் உள்ளிட்டவை மீட்கப்பட வேண்டும். இதனைப் பாதுகாக்க தவறிவிட்ட அறநிலையத்துறை வெளியேற வேண்டும்.தமிழகத்தில் ஒன்றுக்கும் உதவாத தெண்டத்திற்கு உள்ள ஒரே துறை இந்து அறநிலையத்துறை ஆகும்’ என்று கூறியுள்ளார்.

‘ஈ.வெ.ரா, மணியம்மை பற்றி பாடத்திட்டத்தைப் பற்றி படித்த குழந்தைகள் ஒழுக்கமாக இருக்குமா? இந்த பாடத்திட்டத்தை புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும். காரைக்குடி அழகப்பா ராஜராஜசோழன் வரலாறுப் பாடத்திட்டத்தை நீக்க வேண்டும் எனக் கூறிய திராவிட கழக தலைவர் கி. வீரமணி கால்டுவேல் வெள்ளையனுக்குக் கைக்கூலிகள் இவர்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்’ என்றும் எதிர்க்கட்சிகள் ஆபத்தான கட்சி பாரதிய ஜனதா எனக் கூறுவது குறித்துக் கேட்ட போது, ‘சி.பி.எம் என்றால் நினைவுக்கு வருவது 9 தான். அதாவது 9 எம்.பியை தான் எனக் கூறிய அவர் தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். ஹெச்.ராஜாவின் இந்தச் சர்ச்சையான  கருத்து தமிழக அரசியல் காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.