சி.ஏ.ஏ-வை திரும்ப பெறுக… தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறியது!

 

சி.ஏ.ஏ-வை திரும்ப பெறுக… தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறியது!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை தெலங்கானா சட்டப்பேரவை இன்று நிறைவேற்றியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இன்று தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர், என்.ஆர்.சி-க்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் கே.சந்திரசேகரராவ் கொண்டுவந்தார். தீர்மானத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. 

telangana-assembly

தீர்மானத்தின் மீது பேசிய சந்திரசேகரராவ், “அரசாங்கத்தை வாக்காளர் அடையாள அட்டையை வைத்து ஓட்டுப்போட்டு மக்கள் தேர்வு செய்கின்றனர். ஆனால், அந்த வாக்காளர் அடையாள அட்டை இந்தியக் குடிமகன் என்பதற்கான ஆதாரம் இல்லை என்று கூறுகின்றனர். ஓட்டுநர் உரிமமும் செல்லாது என்கிறார்கள். ஆதாரும் வேலை செய்யாது… ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் கூட வேலை நிரூபிக்காது என்றால் எதுதான் இந்தியன் என்பதை நிரூபிக்கும்? 

telangana-cm

கோடிக்கணக்கான மக்கள் எந்த ஒரு தகுந்த ஆவணங்களும் இன்றி வசிக்கின்றனர். எனவே, குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றி மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார். இதைத் தொடர்ந்து சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.