சி.ஏ.ஏ-வுக்கு எதிராக 2 கோடி பேர் கையெழுத்து! -ஸ்டாலின் மகிழ்ச்சி

 

சி.ஏ.ஏ-வுக்கு எதிராக 2 கோடி பேர் கையெழுத்து! -ஸ்டாலின் மகிழ்ச்சி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இரண்டு கோடி பேர் கையெழுத்திட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க மிஸ்டு கால் திட்டத்தை அறிவித்தது. சிஏஏ-வுக்கு ஆதரவு தெரிவிக்கும் நபர் குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டது. நடிகையிடம் பேச, பாலியல் பெண்களிடம் பேச, இலவச நெட்ஃபிளிக்ஸ் சேவை பெற இந்த எண்ணை அழையுங்கள் என்று எல்லாம் நூத பிரசாரம் செய்து அதற்கு பா.ஜ.க-வினர் ஆதரவு திரட்டினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இரண்டு கோடி பேர் கையெழுத்திட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க மிஸ்டு கால் திட்டத்தை அறிவித்தது. சிஏஏ-வுக்கு ஆதரவு தெரிவிக்கும் நபர் குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டது. நடிகையிடம் பேச, பாலியல் பெண்களிடம் பேச, இலவச நெட்ஃபிளிக்ஸ் சேவை பெற இந்த எண்ணை அழையுங்கள் என்று எல்லாம் நூத பிரசாரம் செய்து அதற்கு பா.ஜ.க-வினர் ஆதரவு திரட்டினர்

stalin

.சி.ஏ.ஏ-வுக்கு எதிராக வலுவான ஆதாரத்துடன் ஆதரவு திரட்டுவது என்று தி.மு.க கூட்டணி சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறுவது என்று திட்டமிடப்பட்டது. மு.க.ஸ்டாலின் நேரடியாகக் களத்தில் இறங்கி மக்களிடம் கையெழுத்து பெற்றார். கையெழுத்து வாங்கி சொத்துக்களை எழுதி வாங்க தி.மு.க திட்டமிட்டு வருகிறது, கையெழுத்திட்ட காகிதம் தேநீர் கடையில் பஜ்ஜி, போண்டா எடுக்கப் பயன்படும் காகிதமாக அளிக்கப்பட்டது என்று எல்லாம் பா.ஜ.க தரப்பில் பல வதந்திகள் பரப்பப்பட்டாலும் பொது மக்கள் ஆர்வத்துடன் வந்து கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர்.

mk stalin

இந்த நிலையில் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது அவர், “வேலை வாய்ப்பின்மையை திசை திருப்பவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ளது. சி.ஏ.ஏ-வுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளார்கள். இந்த கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்தின் நகல் இன்னும் ஐந்து நாட்களில் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படும்” என்றார்.