சி.ஏ.ஏ-வால் பாதிப்பு இல்லை! – ரகசிய கூட்டத்தில் இஸ்லாமிய தலைவர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி பழனிசாமி

 

சி.ஏ.ஏ-வால் பாதிப்பு இல்லை! – ரகசிய கூட்டத்தில் இஸ்லாமிய தலைவர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி பழனிசாமி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மூன்று மாதங்களாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், எங்கள் மாநிலங்களில் அனுமதிக்க மாட்டோம் என்று கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், புதுச்சேரி மாநிலங்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை, எனவே போராட்டம் நடத்துவது தேவையில்லாதது என்று ஞாயிறு நள்ளிரவில் நடந்த இஸ்லாமியத் தலைவர்களுடனான ரகசிய கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.

caa-protest-chennai

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மூன்று மாதங்களாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், எங்கள் மாநிலங்களில் அனுமதிக்க மாட்டோம் என்று கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், புதுச்சேரி மாநிலங்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. தெலங்கானாவும் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழகத்திலும் அதுபோன்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. தமிழகம் முழுவதும் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், தமிழகத்தில் போராட்டம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் போராட்டக்காரர்கள் தமிழக சட்டப் பேரவையை முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட இஸ்லாமிய கட்சித் தலைவர்களை ஞாயிறு இரவு அழைத்து நள்ளிரவு வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். 

edapadi-palanisamy-02

அப்போது, தங்கள் தரப்பு நியாயத்தை போராட்டக்காரர்கள் முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். இவற்றுக்கு எல்லாம் ஏற்கனவே பதில் அளித்தாகிவிட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். இருப்பினும் இஸ்லாமியர்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து மத்திய அரசிடம் சில சந்தேகங்களைக் கேட்டுள்ளோம். சிறுபான்மையினர் நலம் மற்றும் உணர்வுக்கு எதிராக எந்த முடிவையும் தமிழக அரசு எடுக்காது என்று கூறியுள்ளார்.
முதலமைச்சரின் இந்த பதிலால் இஸ்லாமிய தலைவர்கள் அதிர்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் முதல்வரின் சமரச முயற்சி பற்றி வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தி வரும் மக்களிடம் அவர்கள் எடுத்துக் கூறிவருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
இதற்கிடையே இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால், அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம், பதற்றம் வண்ணாரப்பேட்டை பகுதியில் நிலவுகிறது.