சி.ஏ.ஏ-வால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? – எடப்பாடியின் கேள்வியால் சிரிக்கும் சமூக ஊடகம்!

சி.ஏ.ஏ-வால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? – எடப்பாடியின் கேள்வியால் சிரிக்கும் சமூக ஊடகம்!

நேற்று சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடியுரிமையைத் திருத்தச் சட்டத்தை சொல்லி நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். இதனால் யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள், சொல்லுங்கள். நாங்கள் தீர்வு வாங்கித் தருகிறோம். தமிழகத்தில் உள்ள, தமிழ் மண்ணில் பிறந்த எந்த ஒரு சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சுட்டிக்காட்டுங்கள். 

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்று சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியது சமூக ஊடகங்களில் நகைப்புக்கு ஆளாகி உள்ளது.

caa-protest-chennai-09

நேற்று சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடியுரிமையைத் திருத்தச் சட்டத்தை சொல்லி நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். இதனால் யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள், சொல்லுங்கள். நாங்கள் தீர்வு வாங்கித் தருகிறோம். தமிழகத்தில் உள்ள, தமிழ் மண்ணில் பிறந்த எந்த ஒரு சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சுட்டிக்காட்டுங்கள். 
அதைவிடுத்து, மக்களை ஏமாற்றி, நாடகமாடி, தவறான, அவதூறான தகவலை சொல்லி, நல்ல அமைதியாக வாழக்கூடிய மாநிலத்தில் இன்று குந்தகம் ஏற்படுத்தும் நிலையை உருவாக்கிவிட்டீர்கள்” என்றார்.

இது தற்போது சமூக ஊடகத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தற்போதுதான் அமலாகி உள்ளது. அடுத்து என்.ஆர்.சி அமல்படுத்தும்போது பிரச்னை ஏற்படும் என்று கூறுகின்றனர். என்.ஆர்.சி அமல்படுத்தப்படும்போது இந்தியர் என்பதற்கான ஆவணத்தை தாக்கல் செய்ய வேண்டும். நாம் இதுநாள் வரை பயன்படுத்தி வந்த ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் உள்ளிட்ட எதுவும் நாம் இந்தியர்கள் என்பதற்கான ஆதாரம் இல்லை. 1990க்கு முன்பு பிறந்த பலரும் பிறப்புச் சான்றிதழ் பெற்றிருக்கவில்லை. அதற்கும் முந்தைய தலைமுறையினருக்கு பிறந்த தேதியே தெரியாது. அப்படி இருக்கும்போது அவர்கள் எல்லாம் இந்தியர் என்றே கருத மாட்டார்கள். இந்த இடத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் உதவிக்கு வரும். இஸ்லாம் தவிர்த்து பிற மதத்தைச் சார்ந்தவராக இருந்தால், எந்த ஒரு ஆவணமும் இல்லை என்றாலும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

caa-protest-chennai-098

இலங்கையிலிருந்து இஸ்லாமியர் உள்பட யார் வந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது. அப்படி இருக்கும்போது, ஆதாரம் இல்லாத தமிழர்கள் தங்கள் குடியுரிமையை இழந்துவிடுவார்கள். என்.ஆர்.சி அமல்படுத்தப்படமாட்டாது என்று மத்திய அரசு உறுதியாக கூறவில்லை. இப்போதைக்கு இல்லை என்று மழுப்பலாக மட்டுமே கூறி வருகின்றன. என்.ஆர்.சி வரும்போது இந்த பாதிப்பு எல்லாம் வரும் என்று சொல்லித்தான் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தெரிந்தும் தெரியாதது போல முதல்வர் பேசியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.