சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆருக்கு தேவையான தகவல்களை போஸ்ட் ஆபிஸ், வங்கிகள் வாயிலாக திரட்டும் மத்திய அரசு….. மம்தா பகீர் குற்றச்சாட்டு….

 

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆருக்கு தேவையான தகவல்களை போஸ்ட் ஆபிஸ், வங்கிகள் வாயிலாக திரட்டும் மத்திய அரசு….. மம்தா பகீர் குற்றச்சாட்டு….

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆருக்கு தேவையான தகவல்களை போஸ்ட் ஆபிஸ் மற்றும் வங்கிகள் வாயிலாக மத்திய அரசு திரட்டுவதாக என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம், முன்மொழியப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதில் தீவிரமாக உள்ளார்.  நேற்று பன்குராவில் நடைபெற்ற நிர்வாக கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: 

தேசிய மக்கள்தொகை பதிவேடு

குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.), முன்மொழியப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகியவற்றை கையாள மத்திய அரசு நிறுவனங்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது.  மாநில அரசின் அனுமதி இல்லாமல் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. பா.ஜ.க. பெயரை குறிப்பிடாமல் வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலைய பணியாளர்கள்  வீடுகளுக்கு சென்று இந்த ஆய்வு மேற்கொள்கின்றனர்.

தேசிய குடிமக்கள் பதிவேடு

இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களால் இந்த பணிகளை மேற்கொள்ள முடியாது. மக்கள் எந்தவொரு தகவலையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். எப்போது மற்றும் எங்கே இது போன்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்ற தகவலை மம்தா பானர்ஜி அந்த கூட்டத்தில் தெரிவிக்கவில்லை.