சிவ சேனா வளையல்கள் அணிந்து இருக்கலாம்…. ஆனால் நாங்கள் இல்லை…. தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி….

 

சிவ சேனா வளையல்கள் அணிந்து இருக்கலாம்…. ஆனால் நாங்கள் இல்லை…. தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி….

வாரிஸ் பதானின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து சிவ சேனா மவுனமாக இருப்பதை, சிவ சேனா வளையல்கள் அணிந்து இருக்கலாம் என பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் கடுமையாக விமர்சனம் செய்தார்.

பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர்களில் ஒருவரான வாரிஸ் பதான் பேசுகையில், சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர். போராட்டங்களில் நாங்கள் பெண்களை முன்னே நிறுத்துகிறோம் என்று கூறுபவர்களுக்கு சொல்கிறேன், இதுவரை எங்கள் சிங்கங்கள் மட்டுமே வெளியே வந்துள்ளன. அதற்கே நீங்கள் வியர்த்து கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் எல்லாம் ஒன்றாக வந்தால் என்ன நடக்கும் என நினைத்து பாருங்கள். 15 கோடி முஸ்லிம்களால் 100 கோடி இந்துக்களை அடக்க முடியும் என தெரிவித்தார்.

வாரிஸ் பதான்

வாரிஸ் பதான் கருத்து தொடர்பாக பெயரளவுக்கு எச்சரிக்கையோடு சிவ சேனா நிறுத்தி கொண்டது. இதனை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மும்பையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க.வின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில் கூறியதாவது: 

சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே

சிவ சேனா கையில்களில் வளைந்து இருக்கலாம். நாங்கள் அப்படி இல்லை. யாராவது ஏதாவது சொன்னால், அவர்களுக்கு அதே வழியில் பதில் வழங்கப்படும். பா.ஜ.க.வுக்கு இவ்வளவு சக்தி இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். வாரிஸ் பதான் மீது பெங்களூரு போலீசார் வெறுப்பு பேச்சு பேசியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேசமயம், வாரிஸ் பதான் தன் பேச்சை திரும்ப பெறுவதாகவும், யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.