‘சிவா ஐ லவ் யூ…’ சிவகார்த்திகேயன் ரசிகனான ஜப்பான் சிறுவன்: வைரல் வீடியோ!

 

‘சிவா ஐ லவ் யூ…’ சிவகார்த்திகேயன் ரசிகனான ஜப்பான் சிறுவன்: வைரல் வீடியோ!

இந்தப் படத்திற்கு பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்திருந்தார்.

இயக்குநர்  பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டுவெளியான திரைப்படம் ரெமோ.  இந்தப் படத்திற்கு பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்திருந்தார்.

sivakarthi

இந்தப் படம்  கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நர்ஸ் கெட்அப்பில்  நடித்து பலரது பாராட்டைப் பெற்றார். 

siva

இப்படம் ஜப்பானின்  நகோயாவில் உள்ள நியூ மினாடோ ஏவோன் மாலில் இப்படம்  திரையிடப்பட்டது. இங்கு திரையிடப்படும் முதல் திரைப்படம் என்ற பெருமையை ரெமோ பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜப்பான் சிறுவன் ஒருவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், லேப்டாப்பில் ரெமோ படத்தை வைத்து கொண்டு, சிவா ஐ லவ் யூ  என்று வெறித்தனமாக சொல்கிறார். இந்த வீடியோவானது  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.