சிவாலய ஓட்டம்! குமரிமாவட்டத்தில் நடக்கும் வினோத வழிபாடு!

சிவாலய ஓட்டம்! குமரிமாவட்டத்தில் நடக்கும் வினோத வழிபாடு!

ஒவ்வொரு சிவராத்திரியின் போதும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த வித்தியாசமான வழிபாடு நடை பெறுகிறது.இது சைவ வைனவ ஒற்றுமக்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா என்பது மக்கள் நம்பிக்கை.இந்த விழாவின்போது பக்த்தர்கள் மொத்தம் 12 சிவன் கோவில்களை வரிசையாக ஓடி சென்று தரிசிப்பது வழக்கம்.

kanyakumari-sivaratri.-01jpg

முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து இந்த ஓட்டம் துவங்குகிறது. வழியெல்லாம் கோவிந்தா கோபாலா என்று கோஷமிட்டபடி ஓடிவரும் பக்தர்களுக்கு பொதுமக்கள் வழி நெடுகிலும்,மோர்,குடிநீர் அன்னதானம் என வழங்கியபடி இருப்பர்.முன்சிறையில் துவங்கும் ஓட்டம் அங்கிருந்து 2 திக்குறிசி மகாதேவர் ஆலயம்,3, திற்பரப்பு மகாதேவர் ஆலயம் 4, திருநந்திக்கரை சிவன் கோவில் 5,பொன்மனை திம்பிலார்குடி மகாதேவர் கோவில் 6, திருபன்றிப்பாகம் சிவன் கோவில் 7, கல்குளம் நீலகண்ட மகாதேவர் 8, மேலங்கோடு சிவன் கோவில் 9, திருவிடைக்கோடு மகாதேவர் ஆலயம் 10, திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், 11, கோழிப்போர்விளை பள்ளியாடி திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம் ஆகிய சிவாலயங்களில் வழிபாடு செய்து 12 வதாக நட்டாலம் சங்கர நயினார் கோவிலுக்கு வந்து தங்கள் சிவாலய ஓட்டத்தை இன்று இரவு நிறைவு செய்வார்கள். 

ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இன்றிரவில் நட்டாலம் சங்கர நயினார் கோவிலில் உணவு வழங்கப்படும். இரவெல்லாம் அங்கே வழிபாடு செய்துவிட்டு நாளை ( சனிக்கிழமை) காலை வீடு திரும்புவர்.பல ஆண்டுகளாக வெகு விமரிசையாக நடைபெறும் இந்தத் திருவிழாவுக்காக குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம்.