சிவாஜி வீட்டு மருமகளாகும் பிக்பாஸ் பிரபலம்! யார் தெரியுமா?

 

சிவாஜி வீட்டு மருமகளாகும் பிக்பாஸ் பிரபலம்! யார் தெரியுமா?

சிவாஜி கணேசனின் பேரனுடன் நடிகை சுஜா வருணிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: சிவாஜி கணேசனின் பேரனுடன் நடிகை சுஜா வருணிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தவர் நடிகை சுஜா வருணி. தமிழில் வெளியான கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வாடீல் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.  

இவரும் சிவாஜி கணேசனின் பேரனுமான சிவாஜி தேவும் காதலித்து வந்தனர். பிக்பாஸில் கூட ‘அத்தான்’ என இவரைத் தான் குறிப்பிட்டிருப்பார், சுஜா.

இருவரும் சமீபத்தில் கோவிலுக்கு சென்றுவிட்டு செல்ஃபி எடுத்து வெளியிட்டனர். அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது. 

sujavarunee

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படம் குறித்து விளக்கம் அளித்துள்ள சிவாஜி தேவ், “சுஜாவின் ரசிகர்களுக்கும் , ஊடக நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், நானும், சுஜாவும் கடந்த 11 வருடங்களாக காதலித்து வருகிறோம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா என்னைத்தான் அத்தான் என கூறியிருந்தார். எங்களது திருமண செய்தியை முறைப்படி அறிவிப்போம்” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சிவாஜி தேவுக்கும் சுஜாவிற்கும் வருகின்ற நவம்பர் 19-ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.