சிவப்பு மண்டல மாவட்டங்களில் இருந்து வரும் கேரள மக்களுக்கு பயண நுழைவு சீட்டு இல்லை

 

சிவப்பு மண்டல மாவட்டங்களில் இருந்து வரும் கேரள மக்களுக்கு பயண நுழைவு சீட்டு இல்லை

சிவப்பு மண்டல மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு பயண பாஸ் வழங்குவதை கேரள அரசு இன்று நிறுத்தியது.

திருவனந்தபுரம்: சிவப்பு மண்டல மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு பயண பாஸ் வழங்குவதை கேரள அரசு இன்று நிறுத்தியது.

நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வரும் கேரள மக்களுக்கு பாஸ் விநியோகம் செய்வதை நிறுத்தியதாக வெளியான செய்திகளை முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று மறுத்தார். ஆனால் சிவப்பு மண்டல மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு பயண பாஸ் வழங்குவதை மாநில அரசு இன்று நிறுத்தியது.

மற்ற மாநிலங்களிலிருந்து திரும்ப விரும்பும் மலையாளிகளுக்கு பயண பாஸ் வழங்கும் பணியை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தியதாக நேற்று செய்திகள் வந்தன. இருப்பினும், முதல்வர் பினராயி விஜயன் இந்த அறிக்கைகளை நேற்று மறுத்தார்.

kerala cm

ஒரு நாளில் மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கையில் ஒரு வரம்பு உள்ளது” என்று பினராயி கூறினார். சிவப்பு மண்டலத்திலிருந்துவரும் ஒருவருக்கு நுழைவு மறுக்கப்படாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். பதிவு செய்யாமல் வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படாது என்று முதல்வர் கூறினார்.

ஆனால், சிவப்பு மண்டல மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு பாஸ் வழங்குவதை கேரள அதிகாரிகள் நிறுத்திவிட்டதாக இன்று தகவல்கள் வெளியாகியுள்ளது.