சிவகார்த்தியின் சயின்ஸ் பிக்‌ஷன் திரைப்படம்…டைட்டிலை அறிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

 

சிவகார்த்தியின் சயின்ஸ் பிக்‌ஷன் திரைப்படம்…டைட்டிலை அறிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படத்துக்கு ‘அயலான்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ttn

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை  இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. இதில்  ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகிபாபு ஆகியோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில்,  ‘சிவகார்த்திகேயனின்  14 ஆவது திரைப்படத்திற்கு  அயலான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது’ என்று அப்டேட் கொடுத்துள்ளார். 

இப்படத்தை சிவகார்த்தியின்  ‘டாக்டர்’ படத்தைத்  தயாரிக்கும்  கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்  தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.