சிவகார்த்திகேயன் முதலில் என்னுடைய படத்தில் தான் அறிமுகமாகியிருக்க வேண்டும்- லட்சுமி ராமகிருஷ்ணன்

 

சிவகார்த்திகேயன் முதலில் என்னுடைய படத்தில் தான் அறிமுகமாகியிருக்க வேண்டும்- லட்சுமி ராமகிருஷ்ணன்

பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘மெரினா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன். அதன்பின் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், ’அயலான்’ மற்றும் ‘டாக்டர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயனை நான் தான் நாயகனாக அறிமுகப்படுத்தியிருக்க வேண்டியது என்று இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

tweet
ட்விட்டர் தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் , நெட்டிசன் ஒருவர் ‘குறள் 786’ என்று  ட்ரெய்லரை பகிர்ந்து “மேடம். இந்த குறும்படத்தை ஏன் இன்னும் வெளியிடவில்லை. எப்போது மேடம் வெளியிடுவீர்கள். காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். அவர் பகிர்ந்த ட்ரெய்லரில் சிவகார்த்திகேயன், அபிநயா,லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்தப்படத்தை லட்சுமியே இயக்கியிருந்தார்.

tweet

இதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், தனது ட்விட்டர் பதிவில், ” இது ஒரு குறும்படம் அல்ல. சிவகார்த்திகேயனுடன் என்னுடைய முதல் படமாக இருந்திருக்க வேண்டியது. அவரை நான்தான் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டியது. நான் அதை கைவிட்ட பிறகுதான் அவர் ‘மெரினா’ படத்தில் நடித்தார். ‘குறள் 786’ படத்தில் அவருக்குச் சிறப்பான கதாபாத்திரம்.ஆனால் அது இல்லாமலேயே வணிக ரீதியாகச் சிறப்பான முறையில் வெற்றி பெற்றுவிட்டார். மேலும் கதாநாயகியாக அபிநயா நடிக்கவிருந்தார். அவரோடு பணிபுரிய விரும்பினேன். இன்ஷா அல்லாஹ், இன்னொரு தருணத்தில் ‘குறள் 786’ எடுக்கப்படலாம்” என்று பதிவிட்டிருந்தார்.