சிவகார்த்திகேயன் பட இயக்குநரோடு கைகோர்த்த ஹிப் ஹாப் ஆதி

 

சிவகார்த்திகேயன் பட இயக்குநரோடு கைகோர்த்த ஹிப் ஹாப் ஆதி

சென்னை: ஹிப் ஹாப் ஆதி நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

பாடகர், இசையமைப்பாளர் என வலம் வந்து கொண்டு ஹிப் ஹாப் ஆதி, மீசையை முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நட்பே துணை திரைப்படம் ஹிட் அடித்தது. 

இந்த நிலையில் இவரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம் இவர் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இதை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 

கடைசியாக இயக்குநர் ராஜேஷ், சிவகார்த்திகேயனை வைத்து மிஸ்டர் லோக்கல் திரைப்படம் இயக்கியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான அந்த படம் போதிய வரவேற்பு கிடைக்காமல் தோல்வியைத் தழுவியது.  

தொடர்ந்து தோல்வி படங்களைக் கொடுக்கும் ராஜேஷ் இந்த படத்திலாவது விட்ட மார்க்கெட்டை பிடிப்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.