சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகமாகும் பிரபல தொகுப்பாளினி மகள்!

 

சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகமாகும் பிரபல தொகுப்பாளினி மகள்!

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய கார்த்திக் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார்.  

‘கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார்.   கே.ஜி.ஆர் பிலிம்ஸ் நிறுவனம்,  சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிகை பிரியங்கா,  வினய், யோகி பாபு, இளவரசு, அர்ச்சனா, ‘கோலமாவு கோகிலா’ டோனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.  அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய கார்த்திக் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார்.  

ஆக்‌ஷன், த்ரில்லர், காமெடி என ஃபுல் எண்டர்டெயின்மெண்ட்டாக  உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு   கோவாவில் நடந்துமுடிந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.  இப்படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் டாக்டர் படத்தில் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் சாரா நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ஒரு அன்பான இயக்குநர் தான் அழகான அறிமுகத்துக்கு ஆசீர்வாதம் போல. நன்றி நெல்சன் திலிப் குமார்.

ttn

சாராவை எப்போது சந்தோஷமாக வைத்திருப்பதற்கு’ என  பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் அர்ச்சனா மற்றும் அவரின் மகள் சாராவிற்கு வாழ்த்துகளைக்  கூறி வருகிறார்கள்.