சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ஐந்து முன்னணி நடிகர்கள்!

 

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ஐந்து முன்னணி நடிகர்கள்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய 5 நடிகர்கள் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய 5 நடிகர்கள் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். 

sivakarthikeyan

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு இப்படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்பட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதையடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வரும் ஏப்ரல் 20ம் தேதி வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்ததிருந்தனர். 

nayanthara

இந்நிலையில் பொதுவாக ராஜேஷ் தான் இயக்கும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில், அதற்கு முன் தான் இயக்கிய படங்களின் ஹீரோக்களை கெஸ்ட் ரோலில் நடிக்க வைப்பதை வழக்கமாகச் செய்து வருகிறார் . ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரனில் ஜீவா, உதயநிதி நடித்த ஒகே ஒகேவில் ஆர்யா, ஆர்யா நடித்த விஎஸ்ஓபியில் விஷால், கடவுள் இருக்கான் குமாரு படத்தில் ஜீவா என்று தன்னுடைய ட்ரேட் மார்க்காகவே அதை பின்பற்றி வருகிறார்.

mrlocal

இந்த நிலையில் வரப்போகும் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் கார்த்தி, ஜீவா, ஆர்யா, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது. 

இதையும் படிங்க: போலீஸ் அதிகாரியாக களம் இறங்குகிறார் நடிகை இனியா!