சிவகார்த்திகேயனுக்கு மேஷ் அப் வீடியோ வெளியிட்டு வாழ்த்து கூறிய சன் பிக்சர்ஸ்

 

சிவகார்த்திகேயனுக்கு மேஷ் அப் வீடியோ வெளியிட்டு வாழ்த்து கூறிய சன்  பிக்சர்ஸ்

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

 

இயக்குநர் பாண்டிராஜின் ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான நடிகர் சிவகார்த்திகேயன், தனது திறமையினாலும், சொந்த முயற்சியினாலும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வசூல் நாயகனாக உருவெடுத்துள்ளார். தற்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் ‘கனா’, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற படங்களை தயாரித்து அமோக வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில், நம்ம வீட்டு  பிள்ளை சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று கூறி மேஷ் அப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முக்கியமாக நம்மளால முடியும்ன்னு நாம நம்புற வரைக்கும் நமக்கு தோல்வியே கிடையாது என்ற சிவகார்த்தியின் பேச்சு உரக்க சொல்லும் படியாக உள்ளது. இதை கண்ட அவரது ரசிகர்கள்,  அடுத்தபடம் குறித்த அப்டேட் வந்தா மாஸாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள். 

சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு  பிள்ளை படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது கவனிக்கத்தக்கது.