சிவகார்த்திகேயனுக்கு தங்கையான முன்னணி கதாநாயகி

 

சிவகார்த்திகேயனுக்கு தங்கையான முன்னணி கதாநாயகி

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள #SK 16 படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள #SK 16 படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். திரைத்துறையில் சில ஆண்டுகளிலே முதல் இடம் பிடித்ததற்கு காரணம் அவர் ஏற்று நடிக்கும் சவாலான கதாபாத்திரம் மட்டுமே. மேலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தால் மட்டுமே ஒரு நடிகையின் மார்கெட்டை நிலையாக இருக்கும் என்ற எண்ணத்தை எண்ணத்தை உடைத்துதெறித்தவர் இவர். 

aishwarya

அந்த வகையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேன் நடிக்கும் புதிய படத்தில் அனு இமானுவேலுடன் இணைந்து மற்றொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இதில் யார் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது அனு இமானுவேல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு சகோதரியாகவும் நடிப்பது உறுதியாகியுள்ளது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இதில் யோகிபாபு, சூரி, சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ், பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.