சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல இயக்குநரின் மகள்!

 

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல இயக்குநரின் மகள்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல இயக்குநர்  பிரியதர்ஷனின் மகள் கல்யாணி ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன். இயக்குநர் ராஜேஷ் இயக்கிய ‘Mr.லோக்கல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து ‘இரும்புத்திரை’ பட இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. 

kalyani priyadharshan

இந்நிலையில் இன்னும் பெயரிடாத இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர்  பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கல்யாணி ஏற்கனவே ‘வான்’ என்ற தமிழ்ப்படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படம் அவருடைய இரண்டாவது தமிழ்ப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.