சிவகார்த்திகேயனின் மனம் கவர்ந்த குட்டீஸ்!

 

சிவகார்த்திகேயனின் மனம் கவர்ந்த குட்டீஸ்!

சென்னை: சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’ பட பாடலை இரண்டு குட்டீஸ் பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள ‘கனா’ திரைப்படம் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படம் சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’ படத்தின் சாயலில் இருப்பதாக கருத்துக்கள் நிலவிய நிலையில், இப்படம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என படக்குழு தரப்பில் கூறப்பட்டது.

ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா சிவகார்த்திகேயன் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். திபு இசையமைத்துள்ள ‘கனா’ படத்தில் ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலை தனது தந்தை சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஆராதனா பாடியுள்ளார்.

இப்பாடல் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்த நிலையில், சைலேந்தர்-சுதர்சனா என்ற சிறுவர்கள் சிவகார்த்திகேயனுக்காக இந்த பாடலை பாடி ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்து மகிழ்ந்த சிவகார்த்திகேயன் குட்டீஸ்களுக்கு தனது அன்பையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.