சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் என்ன தெரியுமா?

 

சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் என்ன தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு விஜய் பாடலை தலைப்பாக வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு விஜய் பாடலை தலைப்பாக வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கி வரும் ’எஸ்.கே 13’ திரைப்படத்தின் தலைப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் இம்மாத இறுதியில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் தலைப்பு தளபதி விஜய் நடித்த ‘தெறி’ படத்தில் வரும் ‘ஜித்து ஜில்லாடி’ ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

2019ம் ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் ‘எஸ்.கே 13’ என்பது குறிப்பிடத்தக்கது.