சிவகாசியில் உள்ள 1,400 பட்டாசு ஆலைகளும் இன்று முதல் காலவரையின்றி மூடப்படுகிறது!

 

சிவகாசியில் உள்ள 1,400 பட்டாசு ஆலைகளும் இன்று முதல் காலவரையின்றி மூடப்படுகிறது!

பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததையடுத்து, பட்டாசு ஆலைகள் மூடப்படுவதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிவகாசி: பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததையடுத்து, பட்டாசு ஆலைகள் மூடப்படுவதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதனால் பட்டாசு விற்பனை தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், சிவகாசியில் உள்ள 1,400 பட்டாசு ஆலைகளும் இன்று முதல் காலவரையின்றி மூடப்படுவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், நல்ல தீர்ப்பு வரும் வரை காத்திருக்க உள்ளதாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி  உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.