சில நாட்களில் புதிதாக கொரோனா பரவல் இருக்காது: முதல்வர் பழனிசாமி உறுதி!

 

சில நாட்களில் புதிதாக கொரோனா பரவல் இருக்காது: முதல்வர் பழனிசாமி உறுதி!

பாதிப்பு குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ், தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்தடுத்த நாட்களில் கொரோனா பாதிப்பு முற்றிலுமாக குறைந்து, கொரோனா பரவல் இல்லாத சூழல் கண்டிப்பாக வரும் என்று கூறினார். 

ttn

தொடர்ந்து, 65 லட்சம் மூன்றடுக்கு கவசங்கள் இருப்பதாகவும்,  3 லட்சம் என்95 முகக்கவசம் இருப்பதாகவும் இந்தியாவில் எந்த மாநிலத்துக்கும் ரேபிட் கிட் வரவில்லை என்றும் தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், சென்னையில் 4,900 தள்ளுவண்டிகள் மூலமாக காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.