‘சில்லுகருப்பட்டி’ டீமை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய நடிகர் சூர்யா… வைரல் போட்டோஸ்!

 

‘சில்லுகருப்பட்டி’ டீமை  வீட்டிற்கு அழைத்து பாராட்டிய நடிகர் சூர்யா… வைரல் போட்டோஸ்!

இப்படத்தை பார்த்த நடிகர் சூர்யா இதன் உரிமத்தை வாங்கினார்.  இதனால் உலகளவில் 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வெளியாகி பிரபலங்களின் பாராட்டை  பெற்றது.

‘பூவரசம் பீப்பீ’ படத்தின் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் ஹலிதா ஷமீமின் மற்றொரு படைப்பு ‘சில்லுகருப்பட்டி’. நான்கு விதமான  குறுங்கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில்  நடிகர்கள் சமுத்திரகனி, சுனைனா,  சாரா அர்ஜுன், நிவேதிதா சதீஷ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

 குறிப்பாக   மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜன், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்திக் என 4  ஒளிப்பதிவாளர்கள் பணிபுரிந்துள்ள இப்படத்தை டிவைன் புரொடக்ஷன் சார்பில் வெங்கடேஷ் வேலினீனி  தயாரித்துள்ளார். இப்படத்தை பார்த்த நடிகர் சூர்யா இதன் உரிமத்தை வாங்கினார்.  இதனால் உலகளவில் 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வெளியாகி பிரபலங்களின் பாராட்டை  பெற்றது.

இந்நிலையில் நடிகர் சூர்யா சில்லுக்கருப்பட்டி படக்குழுவை வீட்டிற்கு அழைத்து வாழ்த்து தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவும் உடனிருந்துள்ளார். இதற்கான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ள இயக்குநர் ஹலிதா ஷமீம் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது