சில்லறைக்காக கறார் காட்டிய கண்டக்டர்! பயணி எடுத்த அதிர்ச்சியான முடிவு!

சில்லறைக்காக கறார் காட்டிய கண்டக்டர்! பயணி எடுத்த அதிர்ச்சியான முடிவு!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் சில நடத்துனர்கள் செய்யும் அட்டூழியங்களால் பயணிகள் தொடர் தொல்லைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். பேருந்தில் டிக்கெட் எடுத்தால், மீதி சில்லறையைக் கொடுக்காமல் இறங்கும் இடம் வரும் வரையில் இழுத்தடிப்பது, கூட்டத்தில் முண்டியடித்து டிக்கெட் போக மீதி சில்லறைக் கேட்டால் ஏதோ கொலைக் குற்றவாளியைப் பார்ப்பது போல பார்ப்பது என்று பல வருடங்களாகவே இந்த பிரச்சனை இருந்து வருகிறது. 

bus

இந்நிலையில், சென்னை தி.நகரில் வாட்ச்மேனாக வேலை செய்து வரும் கமலக்கண்ணன் என்பவர், இன்று காலை தன் மகனை சொந்த ஊருக்கு ரயில் ஏற்றி அனுப்பி விட்டு, வேலைக்குச் செல்வதற்காக தி.நகர் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார். தொடர்ச்சியாக வந்த இரண்டு பேருந்துகளிலும், தன்னிடம் இருந்த 500 ரூபாயைக் கொடுத்து டிக்கெட் கேட்டிருக்கிறார். சில்லறை இல்லை எனக் கூறி இரண்டு பேருந்துகளில் இருந்தும் அவரை கீழே இறங்கி விட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்து மூன்றாவதாக வந்த பேருந்தில் ஏறியுள்ளார். அந்த பேருந்தின் நடத்துநரும் சில்லறை இல்லை என அவரை அடுத்த நிறுத்தத்தில் கீழே இறக்கி விட்டுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கமலகண்ணன், பேருந்தை தவிர்த்து விட்டு, ஆட்டோவில் தி.நகருக்கு கிளம்பி வந்துள்ளார். கமலகண்ணன் வந்துக் கொண்டிருந்த ஆட்டோ, தேனாம்பேட்டை சிக்னல் அருகே வரும் போது, அவரை முதன் முதலாக கீழே இறக்கி விட்ட பேருந்துகளில் ஒன்றான 23-சி பேருந்து அவரைக் கடந்து சென்றுள்ளது. அதைப் பார்த்து மேலும் ஆத்திரமடைந்த கமலக்கண்ணன் சாலையில் இருந்த கல்லை எடுத்து அந்தப் பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது ஆத்திரத்தில் எறிந்தார்.

kamalakannan

வேகமாக கல் பட்டதில், பேருந்தின் கண்ணாடி உடைந்து சிதறியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் என்னவோ அசம்பாவிதம் நடக்கிறது என்பதைப் புரிந்துக் கொண்டு, பேருந்தை ஓரமாக நிறுத்தியுள்ளார். பேருந்தில் இருந்த பயணிகள், ஏதோ பெரிய பிரச்சனை என்று பயத்தில் அலறி அடித்துக் கொண்டு பேருந்தை விட்டு கீழே இறங்கி சிதறி ஓடினார்கள். அதே நேரத்தில் அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், ஆட்டோவில் இருந்த கமலக்கண்ணனை மடக்கிப் பிடித்து சாலையோரமாக உட்கார வைத்துள்ளனர். பின்னர் அவரிடம் விசாரித்த போலீசாரிடம், கண்டக்டர் சில்லறை இல்லையென கீழே இறக்கி விட்டதாலேயே ஆத்திரத்தில் கண்ணாடியை உடைத்ததாக அவர் கூறியுள்ளார். அவர் மீது பொதுச் சொத்தை சேதப்படுத்தியதற்காக வழக்குப் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.