சில்க் ஸ்மிதா போலவே தோற்றம் கொண்ட இளம்பெண்: வைரலாகும் டிக் டோக் வீடியோ!

 

சில்க் ஸ்மிதா போலவே தோற்றம் கொண்ட இளம்பெண்: வைரலாகும் டிக் டோக்  வீடியோ!

80களில் கோலிவுட் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த  சில்க் ஸ்மிதா தான் அப்போதைய பெரும்பாலான நடிகைகளுக்குச் சிம்மசொப்பனம்.

சில்க் ஸ்மிதா போலவே தோற்றம் கொண்ட  இளம்பெண்ணின் டிக் டோக்  வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

smitha

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இன்றுவரை நீங்கா இடம்பிடித்தவர் சில்க் ஸ்மிதா. கவர்ச்சி மட்டுமில்லாது அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களின் மூலம் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தவர். 80களில் கோலிவுட் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த  சில்க் ஸ்மிதா தான் அப்போதைய பெரும்பாலான நடிகைகளுக்குச் சிம்மசொப்பனம்.

smitha

பல முன்னணி நாயகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்த சில்க் ஸ்மிதா 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். 17 வருட சினிமா வாழ்க்கையோடு தனது பயணத்தை முடித்து கொண்டாலும், இன்றுவரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சில்க் ஸ்மிதா.

 

இந்நிலையில் சில்க் ஸ்மிதா போலவே தோற்றமளிக்கும் பெண்ணின் புகைப்படம்  மற்றும் அவரின் டிக் டோக் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைக்கண்ட சிலர் இவர் சில்க் ஸ்மிதா மாதிரியே உள்ளாரே? என்று வியப்பில் ஆழ்ந்து வருகின்றனர்.