சிலை கிடைத்தால் தான் மழை பெய்யும்: அருள்வாக்கால் ஆற்றில் அம்மன் சிலையை தேடும் பக்தர்கள்; சேலத்தில் பரபரப்பு!?

 

சிலை கிடைத்தால் தான் மழை பெய்யும்: அருள்வாக்கால் ஆற்றில் அம்மன் சிலையை தேடும் பக்தர்கள்; சேலத்தில் பரபரப்பு!?

அருள்வாக்கு கூறியதையடுத்து  காவிரி ஆற்றில் வீசிய அம்மன் சிலையைச் சேலம் மக்கள் தேடி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எடப்பாடி: அருள்வாக்கு கூறியதையடுத்து  காவிரி ஆற்றில் வீசிய அம்மன் சிலையைச் சேலம் மக்கள் தேடி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

salme

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி ஊராட்சிக்குப்பட்ட ஒட்டப்பட்டியில் அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகத்தையொட்டி பழைய அம்மன் சிலையை பூலாம்பட்டி  காவிரி ஆற்றில் வீசிவிட்டு புதிய சிலையைப் பிரதிஷ்டை செய்துள்ளனர். 

salem

இந்நிலையில் வைகாசி மாத திருவிழாவையொட்டி வில் திருவிழாவுக்கு ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.அப்போது அங்கு சாமியாடிய பெண்கள், ஆற்றில் வீசிய அம்மன் சிலையை மீண்டும் கொண்டு வந்து வைத்து வழிபாட்டால் மழை பொழியும் ஊர் செழிக்கும் என்று அருள்வாக்கு கூறியதாகத் தெரிகிறது. 

salme

இதை நம்பிய அப்பகுதிவாசிகள் ஆற்றில் வீசிய சிலையை தேடும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளனர். தூத்துக்குடியிலிருந்து முத்துக்குளிக்கும் வீரர்களை அழைத்து வந்து இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது ஆற்றில் மீண்டும் அருள் வந்து சாமியாடிய பெண்கள் இருவர், சிலை இருக்கும் இடத்தை காண்பிப்பதாகக் கூறி, அவர்களுடன் ஆற்றுக்குள் சென்றுள்ளனர். இருப்பினும் சிலை கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட 15 நாட்கள் கடந்துள்ள நிலையில்  மக்கள் அருள்வாக்கை நம்பி சிலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதைத் தேடி வருவது  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.