சிலை கடத்தல் விவரங்களை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவு

 

சிலை கடத்தல் விவரங்களை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதியோடு நிறைவடைந்தது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. அதன் பின்னர், கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் இந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி (இன்று) சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் மீண்டும் நியமிக்கப்பட்டார். 

ttn

இவரின் பதவிக்காலத்தில் அவர் மீட்டு வந்த சிலைகள் ஆயிரக்கணக்கானவை, அவற்றின் மதிப்பு கோடிக்கணக்கானவை. கல்லிடைக் குறிச்சியில் உள்ள அறம் வளர்த்த நாயகி அம்மன் ஆலயத்தில் காணாமல் போன ஐம்பொன் நடராஜர் சிலையை, சுமார் 36 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன். மாணிக்க வேல் தலைமையிலான குழு மீட்டு வந்தது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இருந்து பல சிலைகளை திருடிச் சென்ற கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர், அமெரிக்காவில் அந்த சிலைகளை விற்று வருவதையும் இவரின் குழுவே கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது. 

ttn

பொன் மாணிக்கவேலுக்கு நீட்டிக்கப்பட்ட ஒரு ஆண்டு பதவிக்காலம் இன்றோடு நிறைவடைவதால், சிலை கடத்தல் தொடர்பாக அவரிடம் இருக்கும் அனைத்து கோப்புகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய் குமார் சிங்கிடம் இன்றைக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.