சிலிர்ப்பூட்டும் துபாய் ! சுற்றுலா விரும்பியா நீங்கள்? அப்போ நீங்கள் துபாயை பார்த்தே ஆகவேண்டும் காரணம்…

 

சிலிர்ப்பூட்டும் துபாய் ! சுற்றுலா விரும்பியா நீங்கள்? அப்போ நீங்கள் துபாயை பார்த்தே ஆகவேண்டும் காரணம்…

துபாய் தனது 48 ஆவது யூனியன் தினத்தை கொண்டாடுகிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது தேசிய தினத்தை  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம்  இரண்டாம் தேதி கொண்டாடுகிறது.ஏழாவது எமிரேட்ட்டாக (EMIRATE) ராஸ் அல் காய்மஹ் (Ras Al Khaimah) இணைந்ததன் காரணமாக இத்தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இத்தினம் அந்நாடுமுழுவதும் பல நிகழ்ச்சிகளுடனும், சிறப்பு நிகழ்வுகளுடனும் கொண்டாடப்படுகிறது.

துபாய் தனது 48 ஆவது யூனியன் தினத்தை கொண்டாடுகிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது தேசிய தினத்தை  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம்  இரண்டாம் தேதி கொண்டாடுகிறது.ஏழாவது எமிரேட்ட்டாக (EMIRATE) ராஸ் அல் காய்மஹ் (Ras Al Khaimah) இணைந்ததன் காரணமாக இத்தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இத்தினம் அந்நாடுமுழுவதும் பல நிகழ்ச்சிகளுடனும், சிறப்பு நிகழ்வுகளுடனும் கொண்டாடப்படுகிறது.

இப்படியிருக்க துபாய் ஒரே கோலாகலமாக காட்சியளிக்கிறது. எங்கும் அழகிய மின்விளக்குகளும், தங்கள் நாட்டின் அடையாள கொடிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் வாணவேடிக்கைகளும், ஊர்வலங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நாள் துபாய் வாசிகளுக்கு ஒரு பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது! இது துபாய் வாசிகளுக்கு ஒரு பொன்னான நாளாகவே கருதுகின்றனர்.

dubai

துபாயில் பார்க்கவேண்டியவை: மிஸ் பண்ணாம பாருங்க இல்லனா வருத்தப்படுவீங்க! துபாய் தனக்கே உரித்தான அழகிய இட வடிவமைப்பும், உயரிய வணிக வளாகங்களையும், அழகிய பாலைவன நிலப்பரப்புகளையும், கட்டிட கலை, கடற்கரைகள், வழிபாட்டு ஸ்தலங்கள் போன்ற சிறப்பம்சங்களை பெற்றுள்ளது. ஆதலால் நீங்கள் எங்காவது சுற்றுலா செல்ல நினைத்தால் துபாய் உங்கள் நினைவிற்கு வரட்டும்! நீங்கள் துபாய்க்கு சென்றால் நீங்கள் பார்ப்பதற்கு ஏராளமானவை உள்ளன அவைகளில் சில உங்களுக்காக…

burj khalifa

1. புர்ஜ் கலீபா (Burj Khalifa)

மிகவும் உயரிய கோபுரமான புர்ஜ் கலீபா உலகிலேயே மிகவும் உயர்ந்த கட்டிடடம் என்ற பெயர் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது! பார்ப்பவர் கண்வியக்கும் வண்ணம் கட்டப்பட்டுள்ள புர்ஜ் கலீபா மொத்தம் 829.8 மீ உயரமும், 160 மாடிகளையும், 2909 படிகளையும் கொண்டு பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. இது 57 மின்தூக்கிகளையும், 8 எஸ்கலேட்டர்களையும், கொண்டுள்ளது.இது துபாய்க்கு சர்வதேச அங்கீகாரத்தை சேர்த்துள்ளது மட்டுமல்லாமல் இது துபாயின்  கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

mosque

2. ஷேய்க் சயீத் கிராண்ட் மோஸியூ (Sheik Zayed Grand  Mosque)

ஷேய்க் சயீத் கிராண்ட் மசூதி வெள்ளை கல்லால் கட்டப்பட்டது, இது நாட்டின் மிகப்பெரிய வழிபாட்டு தலமாக விளங்குகின்றது. இங்கு 40,000 மேற்பட்ட மக்கள் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.ஷேய்க் கிராண்ட் மசூதி தனக்கே உரித்தான மிகப்பெரும் கட்டிடக்கலையான பாரசீக-முகலாய, இந்தோ இஸ்லாமிய(Persian-Mughal, Indo-Islamic) முறையின் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெள்ளை கற்களை கொண்டு கட்டப்பட்டதால் இரவில் பார்ப்பவர் கண்களை பறிக்கும்!

ferrari world

3. பெர்ராரி வேர்ல்ட் (Ferrari World)

சிலிர்ப்பூட்டும் சவாரிகளை விரும்பும் நபரா நீங்கள்? உலகின் அதிவேக ரோலர் கோஸ்டர் எனப்படும் போர்முலா ரோசா (Formula Rossa) துபாயில் தான் உள்ளது. மேலும், அதிவேக சவாரிகளை கொண்ட பெர்ராரி வேர்ல்ட்  (Ferrari World) யஸ் தீவில் (Yas Island), அபு தாபி யினிடத்திற்கு மக்களை கொண்டுவருகிறது.

palm island

4. பாம் ஐலாந்து ஜுமேரா துபாய்  (Palm Islands Jumeriah, Dubai)

துபாயில், மொத்தம் மூன்று செயற்கை தீவுகள் துபாயின் கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ளன. அவை, பாம் ஜுமேரா, தேற தீவு, மற்றும் பாம் ஜெபேல் அலி ஆகும். இத்தீவுகளில், நவீன ரக ஹோட்டல்களும், ஆடம்பர தாங்கும்  விடுதிகளும், படகு சவாரி செய்ய சிறப்பு நவீன வசதிகளும் செய்யப்பட்டு பார்ப்பதெற்க்கே மிகவும் அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிரம்மிக்கவைக்கும் சிறப்பு என்னவென்றால் இதனை மேலிருந்து பார்த்தால் இவை பனை வடிவிலே உருவாக்கப்பட்டிருக்கும் வியக்கவைக்கும் காட்சி தரும். 

dubai desert

5. துபாய் டெஸெர்ட் சபாரி (Dubai Desert Safari)

துபாய் தனது சிவந்த அழகிய அகல விரிந்த பாலைவன நிலப்பரப்புகளை கொண்டு அழகாக காட்சியளிக்கிறது.இங்கு வானிலை பகலில் அதீத வெப்பத்திலிருந்து, இரவில் உறையும் குளிருக்கு நெருங்கும். இதில் நீங்கள் ஒட்டக சவாரியும் செய்து மகிழலாம்.மேலும் நீங்கள் இங்கு வர விரும்பினால் ஏதாவது ஒரு ஏஜென்சியில் புக் செய்தும் பயணிக்கலாம். இங்கு வருபவருக்கு முகாமிட்டும், இரவு உணவையும் உண்ணும் அனுபவத்தையும் பெறலாம். 

dubai mall

6. துபாய் மால் (Dubai Mall)

துபாய் மால் உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட இடங்களில் ஒன்று என்ற பெருமையை பெற்றுள்ளது இது 502,000 ச.மீ. கொண்டு விளங்குகிறது. இந்த மால் மால்களிலியேயே மிகவும் பெரிய மால் என்றும் இது 26வது இடத்தை வகித்துள்ளது. துபாய் மாலில் வாங்குவதற்கு அங்காடிகள் மட்டுமல்லாது மீன்குளம்(aquarium), மிருகக்காட்சி சாலை, உட்புறமாக வடிவமைக்கப்பட்ட தீவுத்திடல் போன்றவையும் உள்ளன.

museum

7. ஷார்ஜாஹ் மியூசியம் ஆப் இஸ்லாமியக் சிவிலைசேஷன் (Sharjah Museum of Islamic Civilazation)